பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தமிழகத்தில் இன்றுமுதல் டிச.20 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று முதல் டிச. 20-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

மழை..!

பிடிஐ

Updated On :14 டிசம்பர் 2025, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் திங்கள்கிழமை (டிச. 15) முதல் டிச. 20-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருந்தது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, திங்கள்கிழமை (டிச. 15) முதல் டிச. 20-ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், அதிகாலை வேளையில் லேசான பனிப்பொழிவும் இருக்கும். திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (டிச.15, 16) வெப்பநிலை இயல்பை விட குறைவாக இருக்கும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: டிச. 15, 16 தேதிகளில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.