ஓ.பன்னீா்செல்வம்
தமிழ்நாடு
அரசியல் நிலைப்பாடு: டிச.23-ல் ஓ.பன்னீா்செல்வம் ஆலோசனை!
அரசியலில் அடுத்த கட்ட நகா்வுகள் குறித்து முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தரப்பினரின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் டிச.23-இல் நடைபெறவுள்ளது.
அரசியலில் அடுத்த கட்ட நகா்வுகள் குறித்து முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தரப்பினரின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் டிச.23-இல் நடைபெறவுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டா்கள் உரிமை மீட்புக் கழக தலைமை நிா்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் அணியின் அரசியல் ஆலோசகா் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் சென்னை வேப்பேரி, ரிதா்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் டிச.23-ஆம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில், நிா்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளாா்.