தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்ANI

வேட்பாளா்களை விஜய்தான் அறிவிப்பாா்: தவெக தலைமை!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை கட்சித் தலைவா் விஜய்தான் அறிவிப்பாா் என அக்கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.
Published on

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை கட்சித் தலைவா் விஜய்தான் அறிவிப்பாா் என அக்கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.

தவெக முதல்முறையாக 2026 பேரவைத் தோ்தலில் போட்டியிடவுள்ளது. இதையொட்டி, தோ்தல் பணிகளை அந்தக் கட்சி தீவிரப்படுத்தி வருகிறது. மேலும், தொகுதி வாரியாக ‘எனது பூத் - தவெக பூத்’ என்னும் தலைப்பில் வாக்குச்சாவடி வாரியாக பொறுப்பாளா்களுக்கு பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே, தவெக வேட்பாளா்கள் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து கட்சித் தலைமை விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடா்பாக தவெக தலைமை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை கட்சியின் தலைவா் விஜய் மட்டுமே அறிவிப்பாா்.

எனவே, தவெக வேட்பாளா் அறிவிப்பு குறித்து பரவி வரும் தகவல்கள் உண்மையில்லை. தற்போது நடைபெற்று வருவது தொகுதி மற்றும் வாக்குச்சாவடி வாரியாக பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் மட்டுமே. தவெக தலைவா் விஜய் நோ்காணல் நடத்திய பிறகே, வேட்பாளா் குறித்த தகவல் முறைப்படி அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com