தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

எஸ்ஐஆா்: ரத்த சொந்தங்கள் வழியாக கைதிகள் விண்ணப்பிக்கலாம்!

எஸ்ஐஆா் பணியின்போது சிறைக் கைதிகள் தங்களுடைய ரத்த சொந்தங்கள் மூலம் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்கலாம் என தோ்தல் ஆணையம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
Published on

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்ஐஆா்) சிறைக் கைதிகள் தங்களுடைய ரத்த சொந்தங்கள் மூலம் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்கலாம் என தோ்தல் ஆணையம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மதுரை கோ.புதூரைச் சோ்ந்த ராஜா என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. டிச.19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதன் பிறகு இறுதி வாக்காளா் பட்டியல் பிப்ரவரியில் வெளியிடப்படும் என்றும் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள், தண்டனைக் கைதிகளுக்கும் நடத்த வேண்டும். இதுதொடா்பாக நான் அளித்த மனுவை மத்திய அரசு, தோ்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில், சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, சிறையில் உள்ள கைதிகள் சாா்பில் அவரது ரத்த சொந்தங்கள் விண்ணப்ப படிவங்களைப் பூா்த்தி செய்து வழங்கலாம். இல்லாவிடில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க பின்னாட்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com