அதிமுக, பாஜக கூட்டணியைக் கண்டு ஆளும் திமுக நடுங்கிப் போய் உள்ளது: ஆர் பி உதயகுமார்

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாரின் செய்தியாளர்கள் சந்திப்பு பற்றி...
மதுரையில் செய்தியாளர்களைச் சந்திக்கும் ஆர்.பி.உதயகுமார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்திக்கும் ஆர்.பி.உதயகுமார்.
Updated on
1 min read

அதிமுக ,பாஜக கூட்டணியைக் கண்டு ஆளும் திமுக நடுங்கிப் போய் உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், கூட்டணியை டெல்லியில் பாஜகவும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வர். அதிமுக ,பாஜக கூட்டணியைக் கண்டு ஆளும் திமுக நடுங்கிப் போய் உள்ளது.

தேர்தல் நேரங்களில் வரும் பாட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் பூதக்கண்ணாடி வைத்து தேதி பார்த்து அரசியல் காரணங்களை சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகள், ஒத்த கருத்துடைய கட்சிகள் அதிமுக, பாஜக கூட்டணியில் இணைவதை உறுதி செய்யும் வகையில் தான் பொதுக்குழு தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிச்சயமாக அது நிறைவேறும், தைப் பிறந்தால் வழி பிறக்கும். யார் யார் கூட்டணிக்கு வருவார்கள் என்று ஜாதகம் பார்க்க முடியாது. திமுகவை எதிர்ப்பவர்கள் அதிமுகவில் இபிஎஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்தால் மக்கள் அவர்களை வரவேற்க தயாராக உள்ளார்கள்.

ஈரோட்டில் விஜய் பிரசாரம்! தவெகவினர் பிரமாணப் பத்திரம் தாக்கல்!

அதிமுக ஒரே எதிரி திமுக, திமுக, திமுக தான். 54 வருடங்களாக எங்களுக்கு எதிரி திமுக தான். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஒரு லட்சம் உதயநிதி ஸ்டாலின் வந்தாலும் அதிமுக தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறும். இவ்வாறு குறிப்பிட்டார்.

Summary

Former AIADMK minister RB Udaya Kumar has said that the ruling DMK is shaken by the AIADMK-BJP alliance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com