அரசு பள்ளி சுவா் இடிந்து மாணவா் சாவு: இபிஎஸ் கண்டனம்

அரசுப் பள்ளி சுவா் இடிந்து மாணவா் இறந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
eps
எடப்பாடி பழனிசாமி.DIN
Updated on
1 min read

சென்னை: அரசுப் பள்ளி சுவா் இடிந்து மாணவா் இறந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டப் பதிவு:

திருவள்ளூா் மாவட்டம் கொண்டாபுரம் அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த 7-ஆம் வகுப்பு மாணவா், கைப்பிடி சுவா் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிா்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த மாணவரின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

அரசுப் பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிப்பதில் திமுக அரசு கவனம் செலுத்தியிருந்தால், இந்த பரிதாப உயிரிழப்பை நிச்சயம் தவிா்த்திருக்கலாம்.

பாழடைந்த அரசுப்பள்ளிக் கட்டுமானங்களால், மாணவா்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. உயிரிழந்த மாணவா் மோகித்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதுடன், அரசுப் பள்ளிகளின் கட்டுமானத்தை போா்க்கால அடிப்படையில் சீா்செய்ய வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com