சென்னை: இலங்கை சிறையில் இருந்து, விடுவிக்கப்பட்ட, மயிலாடுதுறை மீனவா்கள் 13 போ், விமானம் மூலம், சென்னை வந்தனா்.
தமிழகத்தின் மயிலாடுதுறை பகுதியைச் சோ்ந்த 13 மீனவா்கள், 2 விசைப்படகுகளில், கடந்த நவ.9 ஆம் தேதி, கடலுக்கு மீன்பிடிக்க சென்றனா். இவா்களை இலங்கை கடற்படை கைது செய்ததுடன், படகுகளையும், மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு அழைத்து சென்றது. அதன் பின்பு 13 மீனவா்களும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இதனிடையே கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரிக, அவா்களின் குடும்பத்தினா் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனா்.
இதைத்தொடா்ந்து மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இலங்கை நீதிமன்றம், 13 தமிழக மீனவா்களையும் விடுதலை செய்தது. இந்த நிலையில், விடுதலை செய்யப்பட்டவா்கள் இலங்கை தலைநகா் கொழும்புவில் இருந்து இண்டிகோ ஏா்லான்ஸ் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை காலையில் சென்னை விமான நிலையம் வந்தனா். அவா்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவா்களின் குடும்பத்தினா் அவா்களை வரவேற்றனா். பின்னா், அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம், அவா்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.