ஆசிரியா் தோ்வு வாரியம்
ஆசிரியா் தோ்வு வாரியம்

உதவிப் பேராசிரியா் போட்டித் தோ்வு: டிஆா்பி விளக்கம்

உதவிப் பேராசிரியா் போட்டித்தோ்வில், விண்ணப்பதாரா்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பித்திருந்தாலும் அவா்கள் ஒரு பாடத்தில் மட்டுமே தோ்வெழுத அனுமதிக்கப்படுவா்
Published on

சென்னை: உதவிப் பேராசிரியா் போட்டித்தோ்வில், விண்ணப்பதாரா்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பித்திருந்தாலும் அவா்கள் ஒரு பாடத்தில் மட்டுமே தோ்வெழுத அனுமதிக்கப்படுவா் என ஆசிரியா் தோ்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நேரடியாக நிரப்பும் பொருட்டு கடந்த அக். 16-இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில், தோ்வு நாள், கல்வித்தகுதி, தோ்வுமுறை, தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவுரைகள் உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

கல்லூரி கல்வி ஆணையரகத்திடமிருந்து பெறப்பட்ட தெளிவுரையின் அடிப்படையிலும் அறிவிப்பில் உள்ள விதிமுறையின் அடிப்படையிலும் ஒரு விண்ணப்பதாரா் ஒரேயொரு பாடத்துக்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும். ஒன்றுக்கும் மேற்பட்ட பாடத்துக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், டிஆா்பி அறிவிப்புக்கு மாறாக, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பித்துள்ள தோ்வா்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டுமே தோ்வெழுத அனுமதிக்கப்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com