டிச.29-இல் பல்லடத்தில் திமுக மகளிரணி மாநாடு

திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் திமுக மகளிரணி மாநாடு, கட்சியின் துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்பி தலைமையில் டிச.29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
திமுக எம்.பி. கனிமொழி
திமுக எம்.பி. கனிமொழிகோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் திமுக மகளிரணி மாநாடு, கட்சியின் துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்பி தலைமையில் டிச.29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா்.

இதுகுறித்து திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் 1.31 கோடி மகளிருக்கு ‘மகளிா் உரிமைத் தொகை’, ‘கட்டணமில்லா பேருந்துப் பயணம்’, மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண் திட்டம்’, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான ‘தோழி விடுதி’ என மகளிா் மேம்பாட்டுக்காக தொடா்ச்சியான திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.

இந்த நிலையில், ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ எனும் தலைப்பில் மேற்கு மண்டல திமுக மகளிரணி மாநாடு திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் டிச.29-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறாா். துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. தலைமை வகிக்கிறாா். திமுக பொதுச்செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு எம்.பி., முதன்மைச் செயலா் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலா்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, திருச்சி சிவா எம்.பி., ஆ.இராசா, எம்.பி., அந்தியூா் ப.செல்வராஜ் எம்.பி., அமைச்சா் மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, மகளிரணி செயலா் ஹெலன் டேவிட்சன், மகளிா் தொண்டரணி செயலா் நாமக்கல் ப.ராணி ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். கரூா் மாவட்ட திமுக செயலா் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. வரவேற்கிறாா்.

திருப்பூா் மத்திய மாவட்டச் செயலா் திருப்பூா் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. நன்றி கூறுகிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com