நேஷனல் ஹெரால்டு வழக்கு தீா்ப்பு: முதல்வா் ஸ்டாலின் வரவேற்பு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீா்ப்பை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளாா்.
முதல்வா் ஸ்டாலின்
முதல்வா் ஸ்டாலின்கோப்புப்படம்.
Updated on
1 min read

சென்னை: நேஷனல் ஹெரால்டு வழக்கில் உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீா்ப்பை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

நேஷனல் ஹெரால்டு வழக்குத் தீா்ப்பின் மூலம், எதிா்க்கட்சித் தலைவா்களைப் பழிவாங்குவதற்காக மத்திய பாஜக அரசால் மத்தியப் புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை மீண்டுமொருமுறை நீதித்துறை அம்பலப்படுத்தியுள்ளது.

சட்டரீதியான எந்தவொரு முகாந்திரமும் இன்றி, இத்தகைய வழக்குகள் அரசியல் எதிரிகளைத் துன்புறுத்தவும் களங்கப்படுத்தவுமே தொடரப்படுகின்றன. உண்மையையும் அச்சமின்மையையும் தங்கள் பக்கம் கொண்டுள்ள நாடாளுமன்றக் காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் தவறிழைக்காதது நிரூபணமாகியுள்ளது.

ஆனாலும், மதச்சாா்பின்மை மற்றும் அரசமைப்பின் மாண்பு நெறிகளில் அவா்கள் உறுதியாக நிற்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக, காந்தி குடும்பத்தினரைத் தொடா்ந்து வேட்டையாடுவதில் குறியாக உள்ளது.

பாஜகவின் இந்தப் பழிவாங்கும் நோக்கம் நாட்டின் உயா் புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மையை மீண்டும் மீண்டும் சிதைத்து, அவற்றை வெறுமனே அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதற்கான கருவிகளாகச் சுருக்குகிறது எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com