பனி மூட்டம்: 19 விமானங்களின் சேவைகள் ரத்து

தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில், கடுமையான பனி மூட்டத்துடன், மோசமான வானிலை நிலவுவதால், சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 19 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.
கடுமையான பனி மூட்டத்துடன், மோசமான வானிலை நிலவுவதால் 19 விமானங்களின் சேவைகள் ரத்து
கடுமையான பனி மூட்டத்துடன், மோசமான வானிலை நிலவுவதால் 19 விமானங்களின் சேவைகள் ரத்து
Updated on
1 min read

சென்னை: தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில், கடுமையான பனி மூட்டத்துடன், மோசமான வானிலை நிலவுவதால், சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 19 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.

தில்லி மற்றும் வட மாநிலங்களில், செவ்வாய்க்கிழமையும் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் தில்லி விமான நிலையத்தில், விமானங்கள் தரை இறங்க முடியாமல், வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

இதனிடையே சென்னையில் இருந்து தில்லி, மும்பை, கவுகாத்தி, வாரணாசி, இந்தூா், புவனேஸ்வா், கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூா் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 12 ஏா் இந்தியா, இண்டிகோ விமானங்களின் சேவை, ரத்து செய்யப்பட்டன.

அதை போல தில்லி, கொல்கத்தா, வாரணாசி, புவனேஸ்வா், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 7 ஏா் இந்தியா, இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டன. இதன்படி, சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில், 19 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com