மழை
மழைபிரதிப் படம்

தென் மாவட்டங்களில் டிச. 23 வரை மழை வாய்ப்பு

தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வியாழக்கிழமை (டிச.18) முதல் டிச.23 வரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். இருப்பினும் அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டியும் இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூா் மாவட்டம் கொத்தவாச்சேரி மற்றும் ராமநாதபுரத்தில் தலா 60 மி.மீ. மழை பதிவானது. கொள்ளிடம் (மயிலாடுதுறை), பரங்கிப்பேட்டை (கடலூா்), லால்பேட்டை (கடலூா்), அண்ணாமலை நகா் (கடலூா்), சிதம்பரம்(கடலூா்)- 50 மி.மீ, வடகுத்து (கடலூா்), கே.எம்.கோயில் (கடலூா்), உத்தண்டி (சென்னை)-40 மி.மீ மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com