ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 11,000 உயர்ந்த வெள்ளி! வரலாறு காணாத உச்சம்!!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 11,000 உயர்ந்த வெள்ளி விலையைப் பற்றி...
ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 11,000 உயர்ந்த வெள்ளி! வரலாறு காணாத உச்சம்!!
Updated on
1 min read

தங்கம்- வெள்ளி விலை நிலவரம் : வெள்ளி ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 11 ஆயிரம் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதே நேரத்தின் தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச.17) சவரனுக்கு ரூ. 400 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 99,200-க்கும் கிராமுக்கு ரூ. 50 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 12,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ. 222 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 11 ஆயிரம் உயர்ந்து ரூ. 2 லட்சத்து 22 ஆயிரம் என்ற வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏறக்குறைய சவரன் ரூ. 96,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த வார இறுதியில் சவரனுக்கு ரூ. 2,560 அதிரடியாக உயர்ந்து ரூ. 98,960 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.

அதைத் தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலையும் சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,00,120 என்ற வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. நேற்று சற்றே தணிந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை உயர்வு ஏன்?

சர்வதேச அளவில் உலக நாடுகளின் மத்தியில் நிலவும் நிச்சயமற்றத் தன்மை, பல்வேறு உலக நாடுகள் தங்கள் மத்திய வங்கிகளில் தங்கத்தின் சேமிப்பு ஆகியவைகளால் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வரும் நிலையில், சத்தமே இல்லாமல் வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நாள்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வரும் தங்கத்துக்கு மத்தியில், அதற்கு சற்றும் சளைத்ததல்ல என்ற வகையில் வெள்ளி விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.

வெள்ளி வெறும் ஆபரணமாக மட்டுமல்லாமல், இயந்திரங்கள், செல்போன், மருந்து தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒரே உலோகம் விலை உயர்ந்த ஆபரணங்கள் தயாரிக்கவும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுவதாலேயே இந்த அளவுக்கு விலை உயர்வுக்கு வழிவகுத்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, பசுமை எரிசக்தித் தொழில்நுட்பம், மின்னணு வாகனங்கள் உற்பத்தி, மின்துறை, 5ஜி உள்கட்டமைப்பு, செமிகண்டக்டர், ரோபோட்கள் தயாரிப்பு போன்றவைகளில் வெள்ளியின் தேவையை அதிகரித்து வருவதும், சர்வதேச அளவில் விலை உயர்வுக்கு வழிவகுத்துவிட்டதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Summary

Silver hits a new all-time high as prices surge ₹11,000 in a single day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com