

மதுரையில் திருப்பரங்குன்ற தீப விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து, ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றுவது தொடர்பான விவகாரம், நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், திமுக அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து, மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பூர்ணசந்திரன் என்பவர் இன்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பூர்ணசந்திரனின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை, "சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபமேற்றுவதைத் தடை செய்த திமுக அரசைக் கண்டித்து, முருக பக்தர் பூர்ணசந்திரன், தீக்குளித்து உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இது போன்ற வருந்தத்தக்க முடிவை, பூர்ணசந்திரன் எடுத்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது.
ஒவ்வொருவரும், அவர்களது குடும்பத்தினருக்கு முக்கியம். இதுபோன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று அனைவரிடமும் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.
பூர்ண சந்திரன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருமாறு, மதுரை பாஜக தலைவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
உயிரிழந்த பூர்ணசந்திரனுக்கு மகன், மகள், மனைவி என உள்ள நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மதுரை தல்லாகுளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.