

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு(எஸ்ஐஆர்) முன்பு 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.
எஸ்ஐஆர் நடவடிக்கைகளில் மொத்தம் 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் அதிகபட்சமாக 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். முன்பு 40,04,694 பேர் இருந்த நிலையில் தற்போது 25,79,676 பேர் உள்ளனர். சென்னையில் மொத்தம் 35.58% சதவீதம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதியான சோழிங்கநல்லூரில் 2,18,444 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, திருப்பூர், கோவை, காஞ்சிபுரத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் தொகுதிவாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம்...
ஆர்.கே. நகர் - 56,916
பெரம்பூர் - 97,345
கொளத்தூர் - 1,03,812
வில்லிவாக்கம் - 97,960
திரு.வி.க. நகர் - 59,043
எழும்பூர் - 74,858
ராயபுரம் - 51,711
துறைமுகம் - 69,824
சேப்பாக்கம் - 89,241
ஆயிரம் விளக்கு - 96,981
அண்ணாநகர் - 1,18,287
விருகம்பாக்கம் - 1,10,824
சைதாப்பேட்டை - 87,228
தியாகராயநகர் - 95,999
மயிலாப்பூர் - 87,668
வேளச்சேரி - 1,27,521
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.