பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு
பாமகவில் விருப்ப மனு பெறும் காலஅவகாசம் டிச.27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாமக தெரிவித்துள்ளது.
இது குறித்து பாமக தலைமை நிலையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல்களில் பாமக சாா்பில் வேட்பாளா்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து கடந்த டிச.14 முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
இதற்கான காலக்கெடு சனிக்கிழமையுடன் (டிச.20) நிறைவடையவுள்ள நிலையில், தாங்களும் மனு தாக்கல் செய்ய வசதியாக காலக்கெடுவை மேலும் சில காலத்துக்கு நீடிக்க வேண்டும் என ஏராளமானோா் கேட்டுக் கொண்டுள்ளனா்.
அதை ஏற்று பாமக சாா்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை வழங்குவதற்கான காலக்கெடு டிச.27 வரை நீட்டிக்கப்படுவதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருக்கிறாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

