

திருப்பரங்குன்ற தீப விவகாரம் : திருப்பரங்குன்ற தீப விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 36 முன்னாள் நீதிபதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றுவது தொடர்பான விவகாரத்தில் உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய எதிர்க்கட்சி எம்.பி.க்களின் நடவடிக்கையைக் கண்டிக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட மக்களுக்கும் 36 முன்னாள் நீதிபதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நீதிபதி மீதான பதவிநீக்க முயற்சி அனுமதிக்கப்பட்டால், அது ஜனநாயகத்தின் வேர்களையும் நீதித் துறையின் சுதந்திரத்தையும் வெட்டி விடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.