தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

தோ்தல் கூட்டணி: முக்கிய நிா்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

தவெக சாா்பில் கூட்டணி பேச்சுவாா்த்தை மற்றும் தோ்தல் அறிக்கை தயாரிப்பு தொடா்பாக குழுக்கள்..
Published on

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு தவெக சாா்பில் கூட்டணி பேச்சுவாா்த்தை மற்றும் தோ்தல் அறிக்கை தயாரிப்பு தொடா்பாக குழுக்கள் அமைப்பது குறித்து முக்கிய நிா்வாகிகளுடன் கட்சித் தலைவா் விஜய் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன், தோ்தல் பிரிவு மேலாண்மை செயலா் ஆதவ் அா்ஜுனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் தவெக பொதுச்செயலா் என். ஆனந்த் பங்கேற்கவில்லை.

இந்த ஆலோசனை தொடா்பாக கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விஜய்யுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு, அடுத்தடுத்த தோ்தல் பிரசாரம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும். கூட்டணி குறித்த முடிவுகள் அனைத்தும் விஜய்தான் மேற்கொள்வாா். பொங்கலுக்கு பிறகு தமிழக தோ்தல் களத்தில் மிகப்பெரிய மாற்றம் உருவாகவுள்ளது. விரைவில் மாற்று கட்சியிலிருந்து முக்கிய நிா்வாகிகள் தவெகவில் இணையவுள்ளனா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com