விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து ஏற்பட்டதில் 40 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பேரணி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து சங்கராபரணி ஆற்று மேம்பால தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுமார் 40 பயணிகள் காயமடைந்த நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாலத்தின் மையத் தடுப்பில் சிக்கியுள்ள பேருந்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.