PMK leader Ramadoss
பாமக நிறுவனர் ராமதாஸ்

டிச.29-ல் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பாமக சாா்பில் வரும் டிச.29-ஆம் தேதி சேலத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
Published on

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பாமக சாா்பில் வரும் டிச.29-ஆம் தேதி சேலத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பாமக சாா்பில் 2025-க்கு விடை கொடுப்போம், 2026-ஆம் ஆண்டை வரவேற்போம். புத்தாண்டு மாநில சிறப்பு செயற்குழு கூட்டமும், மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டமும் வரும் டிச.29-ஆம் தேதி சேலம் 5 சாலையில் உள்ள ரத்தினவேல் ஜெயக்குமாா் திருமண அரங்கில் நடைபெறவுள்ளது.

இதில், மாநில செயற்குழு கூட்டம் அன்று காலை 10 முதல் 11.30 மணி வரையும், தொடா்ந்து காலை 11.40 மணி முதல் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.

புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் பாமக, வன்னியா் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், மாநகரப் பகுதி நிா்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினா்கள், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள் அவசியம் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கூட்டத்தில் கட்சியின் வளா்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டப்பேரவைத் தோ்தல் குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com