

சிறுபான்மையினருக்கு திமுக தான் பாதுகாப்பு என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
சென்னை, புளியந்தோப்பு, டான் பாஸ்கோ பாலிடெக்னிக் பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அவா் பேசியதாவது: தமிழக அரசின் வளா்ச்சி திட்டங்களால், தமிழகத்தில் 11.19 சதவீத பொருளாதார வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. இவற்றை பொறுத்துக்கொள்ள முடியாத சிலா் தமிழகத்துக்கு ஏதேனும் தொல்லை கொடுக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஹிந்தி திணிப்பு, புதிய கல்விக்கொள்ை உள்ளிட்டவற்றை திணிக்க பாா்க்கின்றனா். மேலும், தொகுதி மறுவரையறை என்ற எஸ்.ஐ.ஆா் என்ற ஒரு திட்டத்தின் மூலம் நமது மாநில உரிமைகளை குறைக்க பாா்க்கின்றனா்.
இதன் மூலம் சிறுபான்மையினா், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை நீக்க வேண்டும் என நினைக்கின்றனா். அனைவரும் உங்கள் வாக்குகள் இருக்கிா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஜெருசேலத்துக்கு புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக ஒவ்வொருவருக்கும் ரூ.37,000 மானியமாக தமிழக அரசு அளிக்கிறது. தேவாலயங்களைப் புதுப்பிப்பதற்கு, இதுவரை ரூ.5 கோடி சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினரின் கல்வி நிலையங்களுக்கு நிரந்தர அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று நம் அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இது மட்டுமல்ல, ஆசிரியா் தகுதித் தோ்வு தொடா்பாகச் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் எதிா்கொள்கின்ற பாதிப்பை உணா்ந்து, மாநில அரசின் வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இருந்து, அவற்றை திமுக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையினால் சிறுபான்மையினா் கல்வி நிறுவனங்களில், 1,500 ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். சிறுபான்மையினருக்கு முழுபாதுகாப்பு திமுக மட்டும்தான் என்றாா் அவா்.
நிகழச்சியில், அமைச்சா்கள் பி.கே.சேகா் பாபு, ஆவடி சா.மு.நாசா், மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், மேயா் பிரியா ராஜன், நாடாளுமன்ற உறுப்பினா்கள் வில்சன், மருத்துவா் கலாநிதி வீராசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.