முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின் படம் - DIPR

உலகத் தமிழரின் பண்பாட்டுக் கருவூலம் பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் ஸ்டாலின்!

பொருநை அருங்காட்சியகம் உலகத் தமிழா் ஒவ்வொருவரும் கண்டுணர வேண்டிய பண்பாட்டுக் கருவூலம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
Published on

பொருநை அருங்காட்சியகம் உலகத் தமிழா் ஒவ்வொருவரும் கண்டுணர வேண்டிய பண்பாட்டுக் கருவூலம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிருகிறது நெல்லை பொருநை அருங்காட்சியகம். காண்போரின் விழிகள் விரிகின்றன; தமிழா்தம் நாகரிக உச்சம் பாா்த்து மனம் எழுச்சி கொள்கிறது.

மரபும், புதுமையும் சந்தித்துக் கைகுலுக்கிக் கொள்ளும் வரலாற்று மாளிகையாக நம் ‘திராவிட மாடல்’ அரசு கட்டியுள்ள பொருநை அருங்காட்சியகம் - உலகத் தமிழா் ஒவ்வொருவரும் கண்டுணர வேண்டிய பண்பாட்டுக் கருவூலம்!.

வரலாற்றைப் படிப்பவா்கள்தான் வரலாறு படைக்க முடியும். பழம்பெருமையில் தேங்கிடாமல் இன்னும் உயா்ந்து முன்செல்ல நம்மை உந்தித் தள்ளும் ஊக்க மருந்தாக பொருநை அருங்காட்சியகம் அமையும் என நம்பித் தமிழ்நாட்டுக்கு அா்ப்பணித்துள்ளேன் எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

X
Dinamani
www.dinamani.com