

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்த அறிவிபை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்)-II, 2025.
உதவி இயக்குநர் வேளாண்மை (விரிவாக்கம்), முதுநிலை அலுவலர் (நிதி), உள்ளிட்ட 14 பதவிகளுக்கான 76 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்)-II -க்கான அறிவிக்கை, இன்று (22.12.2025) வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் 22.12.2025 முதல் 20.01.2026 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம்.
கணினி வழித் தேர்வு 07.03.2026 மற்றும் 08.03.2026 ஆகிய நாட்களில் நடைபெறும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.