

பொங்கல் பரிசுத் தொகுப்போடு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
எடப்பாடியில் எம்எல்ஏ திட்ட நிதியில் முடிக்கப்பட்ட பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் எடப்பாடியில் பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. அப்போது அவர் பேசுகையில், மக்கள் விரோத அரசை அகற்ற விருப்பம் உள்ளவர்கள் எங்களோடு இணைந்து கொள்ளலாம். பொங்கல் பரிசுத் தொகுப்போடு 5,000 ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும். திமுகவின் தேர்தல் அறிக்கை, நூறு நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும் என தெரிவித்தது.
ஆனால் செய்தார்களா?. இன்று மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாள்களாக உயர்த்திருக்கிறது. அதனைப் பாராட்ட திமுக அரசுக்கு மனமில்லை. கல்விக் கடன் தள்ளுபடி, கேஸ் சிலிண்டர் மானியம் என திமுக அறிவித்த வாக்குறுதிகள் என்னவானது?. கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது திமுக அரசு. செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் திமுக அரசு திட்டமிட்டே ஏமாற்றுகிறது. எஸ்ஐஆர் நடைமுறைக்குப் பின் ஒரு கோடி வாக்குகள் நீக்கப்பட்டதாக தவறான தகவல் கூறுகின்றனர்.
போலி வாக்காளர்கள், இரட்டை வாக்காளர்களைத்தான் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இறந்தவர்களின் பெயர்கள், போலி வாக்காளர்களை வைத்து திமுக இவ்வளவு நாள்களாக வெற்றி பெற்று வந்தது. இறந்தவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் உயிர்பெற்று வந்து திமுகவுக்கு வாக்களித்தனர். உண்மையான வாக்காளர்கள் விடுபட்டிருந்தால் படிவத்தை பூர்த்தி செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம். எஸ்ஐஆர் நடைமுறை எல்லா கட்சிக்கும் பொதுவானது, அதில் என்ன குறைபாடு உள்ளது. இவ்வாறு குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.