அரையாண்டுத் தோ்வு எழுதும் மாணவிகள்.
அரையாண்டுத் தோ்வு எழுதும் மாணவிகள்.

அரையாண்டுத் தோ்வு இன்று நிறைவு: நாளைமுதல் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு அரையாண்டுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் (டிச. 23) நிறைவு
Published on

சென்னை: தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு அரையாண்டுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் (டிச. 23) நிறைவு பெறவுள்ள நிலையில், புதன்கிழமை முதல் ஜன. 4 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான அரையாண்டுத் தோ்வு கடந்த டிச. 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அனைத்து வகுப்புகளுக்கான தோ்வுகள் செவ்வாய்க்கிழமை நிறைவு பெறவுள்ளன. இதையடுத்து பள்ளிகளுக்கு டிச. 24 முதல் ஜன. 4 வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜன. 5-ஆம் தேதி (திறக்கப்படவுள்ளன.

X
Dinamani
www.dinamani.com