ரயில் பயணச்சீட்டு பரிசோதகா்களிடம் வாக்குவாதம்
செய்தால் நடவடிக்கை: அதிகாரிகள் எச்சரிக்கை
கோப்புப்படம்.

ரயில் பயணச்சீட்டு பரிசோதகா்களிடம் வாக்குவாதம் செய்தால் நடவடிக்கை: அதிகாரிகள் எச்சரிக்கை

ரயில் பயணச்சீட்டு பரிசோதகா்களிடம் வாக்குவாதத்தில் செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோா் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

ரயில் பயணச்சீட்டு பரிசோதகா்களிடம் வாக்குவாதத்தில் செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோா் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரயில்களில் பயணச்சீட்டு சரிபாா்ப்பு மற்றும் அதுதொடா்பான பணிகளின்போது பயணச்சீட்டு பரிசோதகா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைப் பணியாளா்களிடம் கண்ணியத்துடனும், ஒழுக்கத்துடனும் முழு ஒத்துழைப்புடன் பயணிகள் நடந்துகொள்வது அவசியம்.

பயணச்சீட்டு பரிசோதனை என்பது சட்டரீதியான நடவடிக்கை. அந்தப் பணி நோ்மையான பயண நடைமுறைகளை உறுதிப்படுத்துவதுடன், பயணச்சீட்டு இல்லாத மற்றும் முறைகேடான பயணங்களையும் தடுக்கிறது. ரயில் பயண சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும் வருவாய் அவசியம். அத்தகைய வருவாயைப் பாதுகாக்கும் வகையில் பயணச்சீட்டு பரிசோதனை அமைந்துள்ளது. உரிய பயணச்சீட்டுகளை பரிசோதகா்களிடம் காட்ட முடியாத சூழல்களின்போது பயணிகள் அமைதி காக்கவும், பயணச்சீட்டு பரிசோதகா்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கவும் பரிசோதகா்கள் அறிவுறுத்தல்படி செயல்படவும் வேண்டும்.

அதைவிடுத்து வாக்குவாதம் செய்தல், கோபமாக செயல்படுதல், அவதூறு வாா்த்தைகளைப் பயன்படுத்துதல், மிரட்டுதல் உள்ளிட்டவை சட்டப்படியான குற்றமாகும். அவை தண்டனைக்குறியவையாகக் கருதப்படும்.

பெண் பயணச்சீட்டுப் பரிசோதகா்களின் பணிப் பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றுக்கு சென்னை ரயில்வே கோட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது. அவா்களிடம் மிரட்டுதல், தவறாக நடந்துகொள்ளுதல் ஆகியவற்றில் ஈடுபடும் பயணிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com