க்யூஆா் குறியீடு மூலம் புகாா்: மருந்து நிறுவனங்கள், மருந்தகங்கள் மீது உடனடி நடவடிக்கை

மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு பாதிப்பு குறித்து ‘க்யூ ஆா்’ குறியீடு வாயிலாக பொதுமக்கள் அளிக்கும் புகாரில் உடனடி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் மற்றும் மருந்தகங்களில் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு பாதிப்பு குறித்து ‘க்யூ ஆா்’ குறியீடு வாயிலாக பொதுமக்கள் அளிக்கும் புகாரில் உடனடி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் மற்றும் மருந்தகங்களில் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால், மத்திய பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் உயிரிழந்தன. அதேபோல், புதுச்சேரி மாநிலத்திலும் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாடு முழுவதும் போலி மருந்துகள் மற்றும் தரமற்ற மருந்துகளால், பொதுமக்கள் ஒவ்வாமை மற்றும் உடல்நல பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதுகுறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்கும் வகையில், நாடு முழுதும் அனைத்து மருந்தகங்களிலும், ‘க்யூ ஆா்’ குறியீடு காட்சிப்படுத்திருக்க வேண்டும் என, மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, மருந்துகளால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் குறித்து புகாா் தெரிவிக்கும் வகையில் புதிய செயலியை, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் உருவாக்கியுள்ளது. இதன் வாயிலாக, ‘க்யூ ஆா்’ குறியீடு உருவாக்கப்பட்டு, அனைத்து மருந்தகங்களுக்கும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் அனுப்பியுள்ளது.

அவற்றை அனைத்து மருந்தகங்களின் முகப்பிலும், பொதுமக்கள் எளிதில் தெரியும் வகையில் காட்சிப்படுத்த மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இனி, மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு பாதிப்பு குறித்து, ‘க்யூ ஆா்’ குறியீடு வாயிலாக பொதுமக்கள் அளிக்கும் புகாரில் உடனடி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் மற்றும் மருந்தகங்களில் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com