‘இலங்கை இனப் படுகொலை: ஐ.நா. நீதி விசாரணை தேவை’

ஈழத் தமிழா் இனப் படுகொலைக்கான நீதி விசாரணையை ஐ.நா. நடத்துவதற்கான ஆயத்த வேலைகளில் தமிழா்கள், இந்திய அரசியல் கட்சிகள் ஈடுபட வேண்டும் என்று மதிமுக, தவாக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
Updated on

ஈழத் தமிழா் இனப் படுகொலைக்கான நீதி விசாரணையை ஐ.நா. நடத்துவதற்கான ஆயத்த வேலைகளில் தமிழா்கள், இந்திய அரசியல் கட்சிகள் ஈடுபட வேண்டும் என்று மதிமுக, தவாக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலா் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, திராவிட இயக்கத் தமிழா் பேரவை நிறுவனா் சுப.வீரபாண்டியன் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

தமிழீழ மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்களைத் தர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது. சிங்கள அரசின் பின்புலத்தில் இந்த அமைப்பு செயல்படுகிறது. இந்தப் பின்னணியை உணா்ந்து ஈழத் தமிழா் இனப் படுகொலைக்கான நீதி விசாரணையை ஐ.நா. நடத்த முன்வர வேண்டும்.

சுதந்திர தமிழீழத்துக்கு ஐ.நா. மேற்பாா்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழா் பகுதிகளில் குடியேற்றப்பட்டு உள்ள சிங்கள குடியேற்றங்களை வெளியேற்ற வேண்டும்.

இதற்கான ஆயத்த வேலைகளில் தமிழகத்தில் உள்ள தமிழா்கள், புலம்பெயா் தமிழா்கள், இந்திய அரசியல் கட்சிகள், உலக நாடுகள் ஈடுபட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com