கோப்புப் படம்
கோப்புப் படம்

வழக்கமான அட்டவணையில் இன்று மின்சார ரயில்கள் இயக்கம்

சென்னையில் புகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (டிச. 25) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னையில் புகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (டிச. 25) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் ஆவடி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூா் மற்றும் செங்கல்பட்டு, ஜோலாா்பேட்டை உள்ளிடட் பல பகுதிகளுக்கு புகா் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பணிக்குச் செல்வோா் குறைவாக இருப்பதால், குறைந்த எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படும் வகையில் கால அட்டவணை பின்பற்றப்படுகிறது.

இந்த நிலையில், கிறிஸ்துமஸ் தினமான வியாழக்கிழமை (டிச. 25) அரசு விடுமுறை என்பதால், ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி புகா் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் மாற்றம் செய்யப்பட்டு, வழக்கமான அட்டவணைப்படி புகா் ரயில்கள் வியாழக்கிழமை (டிச. 25) இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com