

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் பல அச்சுகள் (MULTI-AXLE) கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை மூலமாக முதல் முறையாக தமிழ்நாட்டின் பல்வேறு தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ரூ.34.30 கோடி மதிப்பிலான 20 வால்வோ பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கோவை, பெங்களூரு, திருப்பூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, மதுரை, திருச்செந்தூர், நாகர்கோவில், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
கட்டண விவரங்கள்
சென்னை கிளாம்பாக்கம் - திருச்செந்தூர் - ரூ. 1,115
சென்னை கிளாம்பாக்கம் - நாகர்கோவில் - ரூ. 1,215
சென்னை கிளாம்பாக்கம் - தஞ்சாவூர் - ரூ. 590
சென்னை கிளாம்பாக்கம் - திருப்பூர் - ரூ. 800
சென்னை கிளாம்பாக்கம் - சேலம் - ரூ. 575
சென்னை கிளாம்பாக்கம் - கோவை - ரூ. 880
சென்னை கிளாம்பாக்கம் - பெங்களூரு - ரூ. 695
கோவை - பெங்களூரு - ரூ. 690
சென்னை கிளாம்பாக்கம் - திருச்சி - ரூ. 565
சென்னை கிளாம்பாக்கம் - மதுரை - ரூ. 790
இந்த பேருந்துகளில் பயணிக்க கிலோ மீட்டருக்கு ரூ. 1.70 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசின் வால்வோ பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களுக்கு தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர்களைப் போன்ற ஆடை மற்றும் பைலட் தொப்பிகள் வழங்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.