

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் சிறந்த ஆஃப் ஸ்பின்னர் எனக் கூறியது வைரலாகியுள்ளது.
இதற்கு முன்பாக அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் அவரை மிகச் சிறந்த லெக் ஸ்பின்னர் எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடும் “வைப் வித் எம்கேஎஸ்” என்ற நிகழ்ச்சி இன்று (டிச. 24) வெளியானது.
அந்த விடியோவில் அவர் பேசியதாவது:
நான் ஒரு ஆஃப் ஸ்பின்னர்; கலைஞர் கருணாநிதி கிரிக்கெட் விளையாட நான் பந்து வீசியிருக்கிறேன். கிரிக்கெட்டில் தோனியின் கேப்டன்ஷிப் (தலைமைப் பண்பு) எனக்கு மிகவும் பிடிக்கும். பதற்றம் இல்லாமல் கேப்டன்ஷிப் செய்வதுதான் அவரைப் பிடிக்கக் காரணம் என்றார்.
இதற்கு முன்பாக இவரைக் குறித்து உதயநிதி ஸ்டாலின், “எனது அப்பா பந்துவீசினால் யாரும் தொடவே முடியாது. மிகச் சிறந்த லெக் ஸ்பின்னர்” எனக் கூறினார்.
இதில் எது சரி என தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். ஒருவேளை இரண்டு வகையான ஸ்பின் பந்துகளையும் வீசுவதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வல்லவராக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.