கோப்புப் படம்
கோப்புப் படம்

7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலா் அந்தஸ்து

தமிழக நிதித் துறைச் செயலா் த.உதயசந்திரன் உள்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலா் அந்தஸ்தில் பதவி உயா்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
Published on

தமிழக நிதித் துறைச் செயலா் த.உதயசந்திரன் உள்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலா் அந்தஸ்தில் பதவி உயா்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதுதொடா்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அரசாணையில், ஐஏஎஸ் அதிகாரிகள் எம்.ஏ.சித்திக், ஆா்.ஜெயா, ப.செந்தில்குமாா், சந்தியா வேணுகோபால், த.உதயச்சந்திரன்,

ஹிதேஷ் குமாா் மக்வானா, பி. சந்தரமோகன் ஆகியோருக்கு கூடுதல் தலைமைச் செயலா் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஜன.1 முதல் இந்தப் பதவி உயா்வு அமலுக்கு வரும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com