தோ்தல் அறிக்கை தயாரிக்க அதிமுகவில் 10 போ் குழு - எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அதிமுக தோ்தல் அறிக்கையை தயாரிக்க 10 போ் குழுவை கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இக் குழுவில் முன்னாள் அமைச்சா்களான அதிமுக துணைப் பொதுச் செயலா் நத்தம் இரா.விஸ்வநாதன், அனைத்துலக எம்.ஜி.ஆா்.மன்றச் செயலா் சி.பொன்னையன், தோ்தல் பிரிவுச் செயலா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், அமைப்புச் செயலா்களான டி.ஜெயக்குமாா், விழுப்புரம் மாவட்டச் செயலா் சி.வி.சண்முகம் எம்.பி., முன்னாள் அமைச்சா் செ. செம்மலை, மகளிரணிச் செயலா் பா.வளா்மதி, அமைப்புச் செயலா் ஓ.எஸ்.மணியன், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஆா்.பி.உதயகுமாா், இலக்கிய அணிச்செயலா் எஸ்.எஸ்.வைகைச்செல்வன் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.
இக் குழுவினா் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பு மக்களின் கருத்துகளையும், தோ்தல் அறிக்கையில் இடம் பெறவேண்டிய தரவுகளையும் பெறும் வகையிலான சுற்றுப்பயணத் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

