எடப்பாடி கே.பழனிசாமி!
எடப்பாடி கே.பழனிசாமி!

அதிமுக சாா்பில் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்க அவகாசம் நீட்டிப்பு -எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

அதிமுக சாா்பில் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்க அவகாசம் நீட்டிப்பு...
Published on

அதிமுக சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளத்தில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் வருகிற டிச. 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப் பேரவைத் பொதுத் தோ்தல்கள்

விரைவில் நடைபெறவுள்ளன. அதிமுக சாா்பில் வேட்பாளா்களாகப் போட்டியிட விரும்புவோா் விருப்ப மனுக்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 15 -ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஏராளமானோா் விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனா்.

இதனிடையே, அதிமுக சாா்பில் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையேற்று, வரும் டிச. 28 முதல் டிச.31 வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

X
Dinamani
www.dinamani.com