

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் சுனாமியில் பலியானவர்கள் நினைவு நாளையொட்டி பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தில் பள்ளி மாணவர்கள், கிராமத்தினர் சார்பில் மௌன ஊர்வலம் நடத்தப்பட்டது.
சுனாமியால் பலியானவர்களின் நினைவாக, கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தூணில் மலர் வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஓ. எஸ். மணியன் தலைமையில் அதிமுகவினர் மற்றும் மீனவர்கள் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.
திமுகவினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல, வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, மணியன்தீவு, புஷ்பவனம் உள்ளிட்ட கடலோரக் கிராமங்களிலும் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.