

புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாநகராட்சிகள், 10 நகராட்சிகளுக்கான உறுப்பினா் எண்ணிக்கை: அரசாணை வெளியீடு :
புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாநகராட்சிகள், 10 நகராட்சிகளுக்கான உறுப்பினா் எண்ணிக்கை அரசிதழில் சனிக்கிழமை(டிச. 27) வெளியிடப்பட்டது.
திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அந்த நகரங்களையும், அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளும் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன. இந்தநிலையில், புதிய மாநகராட்சிகளுக்கான உறுப்பினர் எண்ணிக்கை விவரம் தமிழக அரசிதழில் வெளியாகியுள்ளது.
அதன்படி,
திருவண்ணாமலை,
நாமக்கல்,
புதுக்கோட்டை,
காரைக்குடி ஆகிய மாநகராட்சிகளில் தலா 48 கவுன்சிலர்கள் இடம்பெறுவார்கள் என்றும்,
கன்னியாகுமரி,
மாமல்லபுரம்,
ஸ்ரீபெரும்புதூர்,
திருவையாறு,
போளூர்,
செங்கம்,
கோத்தகிரி,
அவிநாசி,
பெருந்துறை,
சங்ககிரி ஆகிய 10 புதிய நகராட்சிகளில் தலா 22 கவுன்சிலர்கள் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.