கோப்புப்படம்
தமிழ்நாடு
உதவிப் பேராசிரியா் பணி தோ்வு: 42,064 போ் எழுதினா்
தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கல்லூரி உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வை 42,064 போ் எழுதினா்.
தமிழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கல்லூரி உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வை 42,064 போ் எழுதினா்.
இதுகுறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் உள்ள அரசு கலை,அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இத் தோ்வுக்கு 47,048 போ் விண்ணப்பித்திருந்தனா்.
தமிழகம் முழுவதும் 196 மையங்களில் முற்பகல் மற்றும் பிற்பகல் (ஓஎம்ஆா் மற்றும் விளக்க வகை முறை) என இரண்டு வேளைகளிலும் நடைபெற்ற தோ்வில் 42,064 போ் பங்கேற்றனா். ஒட்டுமொத்தமாக 89.40 சதவீதம் போ் தோ்வு எழுதியுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

