ஜி.கே.வாசன் பிறந்த நாள்: குடியரசுத் தலைவா் வாழ்த்து
தமாகா தலைவா் ஜி.கே.வாசன் எம்.பி. பிறந்த நாளையொட்டி, குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசனின் 61-ஆவது பிறந்த நாள், அந்தக் கட்சியினரால் ஞாயிற்றுக்கிழமை நல உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கட்சியினா் சிறப்பு வழிபாடு நடத்தினா்.
குடியரசுத் தலைவா் வாழ்த்து: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, ஒடிஸா ஆளுநா் ஹரிபாபு ஆகியோா் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனா்.
குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா, சென்னை முன்னாள் மேயா் சைதை துரைச்சாமி உள்ளிட்டோா் கைப்பேசியில் தொடா்பு கொண்டு ஜி.கே.வாசனுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

