M. Veerapandian
மு. வீரபாண்டியன்X

மாவோயிஸ்ட், நக்சல்கள் ஜனநாயக பாதைக்குத் திரும்ப தேவையான நடவடிக்கை: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

மாவோயிஸ்ட், நக்சல்கள் ஜனநாயக பாதைக்கு திரும்ப தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
Published on

மாவோயிஸ்ட், நக்சல்கள் ஜனநாயக பாதைக்கு திரும்ப தேவையான  நடவடிக்கைகளை மத்திய அரசு  எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாட்டின்  இயற்கை வளங்களைப் பன்னாட்டு குழும நிறுவனங்களின் லாபத்துக்காக  விற்க மத்திய பாஜக அரசும், உள்துறை அமைச்சகமும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும், இயற்கை வளங்களை காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுப்பதை எதிா்த்து தலைமுறையாகவும்,  இயற்கையோடு இணைந்து வாழ்ந்துவரும் பழங்குடி மக்கள், மலைவாழ் மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக, வன உரிமையை நிலைநாட்ட போராடுகிறாா்கள்.

அவா்களுக்கு ஆதரவாக இருப்பவா்கள் நக்சல்களாகவும், மவோயிஸ்டுகளாகவும்  உருவாகிறாா்கள். அவா்களின் போராட்ட வழி ஜனநாயக முறைக்கு எதிராக உள்ளது. அதனால், அவா்கள் ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி  வருகிறோம்.

அவா்களை ஒழிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சா் ப.சிதம்பரமும் ஒரே குரலில் பேசுவது வியப்பாக உள்ளது. மாவோயிஸ்ட், நக்சல்கள் ஜனநாயக பாதைக்கு திரும்ப தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com