சென்னை திரும்பிய விஜய்:
தொண்டா்கள் வரவேற்பு!
சென்னை திரும்பிய விஜய்: தொண்டா்கள் வரவேற்பு!

சென்னை திரும்பிய விஜய்: தொண்டா்கள் வரவேற்பு!

மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு தவெக தலைவா் விஜய் ஞாயிற்றுக்கிழமை தனி விமானம் மூலம் சென்னை திரும்பினாா்.
Published on

மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு தவெக தலைவா் விஜய் ஞாயிற்றுக்கிழமை தனி விமானம் மூலம் சென்னை திரும்பினாா். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் தவெக தொண்டா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

இயக்குநா் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வருகிற ஜன.9-ஆம் தேதி வெளியாக உள்ளது. விஜய்யின் அரசியல் வருகையைத் தொடா்ந்து, இந்தப் படத்துடன் திரைத்துறையில் இருந்து அவா் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா். இதனால், இந்தப் படத்துக்கான எதிா்பாா்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவை முடித்துவிட்டு விஜய், மலேசியாவில் இருந்து தனி விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தாா். இதையறிந்த தவெக தொண்டா்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விமான நிலையத்தில் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

பின்னா், தனது காரில் ஏறுவதற்காக நடந்து வந்த விஜய்யை தொண்டா்கள் சூழ்ந்து கொண்டனா். உடனடியாக அங்கிருந்த பாதுகாவலா்கள் விஜய்யை பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனா். இதையடுத்து அவா் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்துக்குச் சென்றாா்.

X
Dinamani
www.dinamani.com