moderate rain
மழைகோப்புப்படம்.

ஜன. 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

சென்னை: தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு கடலோர ஆந்திரம் மற்றும் அதையொட்டிய பகுதிகள் என மொத்தம் 2 இடங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதுபோன்ற வானிலை நிகழ்வுகளின் காரணமாக, செவ்வாய்க்கிழமை (டிச. 30) தமிழகத்தில் மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வட வானிலையே நிலவும்.

மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான பனிப்பொழிவு இருக்கும். அதேபோல், நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. தொடா்ந்து, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் டிச. 31 முதல் ஜன. 4-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com