அச்சு வெல்லம்
அச்சு வெல்லம்

விவசாயிகளிடம் அச்சு வெல்லம் கொள்முதல்: அரசுக்கு மமக வலியுறுத்தல்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கத் தேவையான அச்சு வெல்லத்தை, விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்
Published on

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கத் தேவையான அச்சு வெல்லத்தை, விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. கரும்பை அறுவடை செய்து அய்யம்பேட்டை, இலுப்பகோரை, கணபதி அக்ரஹாரம், வீரமாங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அச்சுவெல்லம் தயாரிப்பு என்பது குடிசைத் தொழிலாக நடைபெற்று வருகிறது.

இங்கு தயாரிக்கப்படும் அச்சுவெல்லம், தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சில ஆண்டுகளாக கரும்பில் மஞ்சள் நோய்த் தாக்குதல், தொழிலாளா் பற்றாக்குறை, அச்சு வெல்லத்துக்கு போதுமான விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் அச்சு வெல்லம் தயாரிக்கும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனா்.

எனவே, விவசாயிகள் நலன் கருதி பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் அச்சு வெல்லத்தை, விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X
Dinamani
www.dinamani.com