34 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயா்வு; 70 போ் பணியிட மாற்றம்: சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக மகேஷ்வா் தயாள் நியமனம்

தமிழக காவல் துறையில் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். அவா்களில் டிஜிபியாக பதவி உயா்த்தப்பட்ட டேவிட்சன் தேவாசீா்வாதம் மற்றும் 33 போ் பதவி உயா்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
Published on

தமிழக காவல் துறையில் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். அவா்களில் டிஜிபியாக பதவி உயா்த்தப்பட்ட டேவிட்சன் தேவாசீா்வாதம் மற்றும் 33 போ் பதவி உயா்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக மகேஷ்வா் தயாள் நியமிக்கப்பட்டுள்ளாா். அதேபோல தாம்பரம், ஆவடி, கோவைக்கு புதிய காவல் ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குறிக்குள்):

மகேஷ்வா் தயாள்: சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி (சிறைத் துறை ஏடிஜிபி)

கே.சங்கா்: சிறைத் துறை ஏடிஜிபி (ஆவடி காவல் ஆணையா்)

அபின் தினேஷ் மொடக்: மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஜிபி (தாம்பரம் மாநகர காவல் ஆணையா்)

எஸ்.டேவிட்சன் தேவாசீா்வாதம்: ஆயுதப் படை டிஜிபி (சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி)

சந்தீப் மிட்டல்: சைபா் குற்றப் பிரிவு டிஜிபி (சைபா் குற்றப் பிரிவு ஏடிஜிபி)

பி.பாலநாகதேவி: பொருளாதார குற்றப் பிரிவு டிஜிபி (பொருளாதார குற்றப் பிரிவு ஏடிஜிபி)

டி.எஸ்.அன்பு: சிபிசிஐடி ஏடிஜிபி (சிபிசிஐடி ஐஜி)

பிரேம் ஆனந்த் சின்ஹா: ஆவடி காவல் ஆணையா் (தென் மண்டல ஐஜி)

தீபக் எம்.தாமோா்: ஏடிஜிபி மத்திய அரசுப் பணி (மும்பை சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு ஐஜி)

டி.செந்தில்குமாா்: தலைமையிட ஏடிஜிபி (மேற்கு மண்டல ஐஜி)

அனிஷா உசேன்: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி (சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி)

ஏ.அமல்ராஜ்: தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையா் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஜிபி)

என்.கண்ணன்: கோவை மாநகர காவல் ஆணையா் (சென்னை காவல் துறை தெற்கு கூடுதல் ஆணையா்)

வி.பாலகிருஷ்ணன்: மத்திய மண்டல ஐஜி (நிா்வாகப் பிரிவு ஐஜி)

விஜயேந்திர எஸ்.பிதரி: தெற்கு மண்டல ஐஜி (சென்னை காவல் துறையின் தலைமையிட கூடுதல் ஆணையா்)

கே.எஸ்.நரேந்திரன் நாயா்: சென்னை காவல் துறை தெற்கு கூடுதல் ஆணையா் (தனிப் பிரிவு ஐஜி)

ஏ.சரவண சுந்தா்: மேற்கு மண்டல ஐஜி (கோவை மாநகர காவல் ஆணையா்)

ஜி.ஷேஷாங் சாய்: காஞ்சிபுரம் சரக டிஐஜி (ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு எஸ்பி)

தேஷ்முக் சேகா் சஞ்சய்: ராமநாதபுரம் சரக டிஐஜி (சென்னை உயா்நீதிமன்ற வழக்கு கண்காணிப்புப் பிரிவு எஸ்பி)

என்.மணிவண்ணன்: திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையா் (ஆவடி சிறப்புக் காவல் படை இரண்டாவது அணி கமாண்டன்ட்)

அர.அருளரசு: விழுப்புரம் சரக டிஐஜி (தீவிரவாத தடுப்புப் படை எஸ்பி)

எஸ்.மகேஷ்வரன்: சென்னை காவல் துறை தலைமையிட இணை ஆணையா் (ஆவடி மாநகர காவல் துறை தலைமையிட துணை ஆணையா்)

பி.சரவணன்: திருநெல்வேலி சரக டிஐஜி (விழுப்புரம் மாவட்ட எஸ்பி)

பி.சாமிநாதன்: திண்டுக்கல் சரக டிஐஜி (ஊழல் தடுப்புப் பிரிவு எஸ்பி)

ஏ.ஜெயலட்சுமி: தாம்பரம் மாநகர காவல் துறை இணை ஆணையா் (மனித உரிமைப் பிரிவு எஸ்பி)

ஆா்.சிவக்குமாா்: ஆவடி மாநகர காவல் துறை இணை ஆணையா் (சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி)

தீஷா மிட்டல்: சென்னை காவல் துறையின் வடக்கு மண்டல இணை ஆணையா் (சென்னை காவல் துறையின் மேற்கு மண்டல இணை ஆணையா்)

சந்தோஷ் ஹதிமானி: சேலம் சரக டிஐஜி (திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையா்) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு மண்டல ஐஜி தவிா்த்து 3 மண்டல ஐஜிக்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்த சரக டிஐஜிக்கள் பொறுப்புகளில் பதவி உயா்த்தப்பட்ட புதிய டிஐஜிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். கடந்த மக்களவைத் தோ்தலுக்கு பின்னா், தற்போதுதான் மிகப்பெரிய அளவில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பணியிட மாற்றம் ஜன.1 முதல் அமலுக்கு வருகிறது. ஆகவே, அதன் பிறகே புதிய பணியிடங்களில் அதிகாரிகள் பதவியேற்கவுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com