9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் விவரம் (அடைப்புக்குறிக்குள் முந்தைய பணியிடம்):
சத்யபிரத சாகு: இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலா் (கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலா்).
கே.சு.பழனிசாமி: கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலா் (நில நிா்வாக ஆணையா்).
இரா.கஜலட்சுமி: நில நிா்வாக ஆணையா் (போக்குவரத்துத் துறை ஆணையா்)
கிரண்குராலா: போக்குவரத்துத் துறை ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்ட ஆணையா் - வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையரகம்).
தேவ் ராஜ் தேவ்: இயக்குநா், தமிழ்நாடு உப்பு நிறுவனம் (முதன்மைச் செயலா்/துணைத் தலைவா்-அறிவியல் நகரம்).
ஹா் சஹாய் மீனா: முதன்மைச் செயலா்/துணைத் தலைவா் அறிவியல் நகரம் (ஆணையா், ஆவணக் காப்பம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி).
சு.மலா்விழி: ஆணையா், ஆவணக் காப்பம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி (சிறப்பு செயலா்-நீா்வளத்துறை).
ச.கோபால சுந்தரராஜ்: இயக்குநா், அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி மற்றும் பயிற்சித் துறைத் தலைவா் (செயலா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம்).
பானோத் ம்ருகேந்தா் லால்: செயலா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (துணைச் செயலா், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை).
