புத்தாண்டு: ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

புத்தாண்டையொட்டி நாளை(ஜன. 1) மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் பற்றி...
Changes in chennai metro train service tomorrow for new year
மெட்ரோ ரயில் (கோப்புப்படம்).
Updated on
1 min read

சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை(ஜன. 1, 2026) ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைபடி இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"நாளை(ஜன. 1) புத்தாண்டையொட்டி மெட்ரோ ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்.

மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கீழ்குறிப்பிட்டுள்ள கால இடைவெளியில் இயங்கும்.

அதன்படி, பகல் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Changes in chennai metro train service tomorrow for new year

Changes in chennai metro train service tomorrow for new year
நடங்கள், நடந்துகொண்டே இருங்கள்... 2026-ல் உடல்நலம் காக்க வேறென்ன செய்ய வேண்டும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com