வந்தே பாரத் ரயில்கோப்புப்படம்.
தமிழ்நாடு
எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்: இன்றுமுதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும்
எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் வியாழக்கிழமை (ஜன.1) முதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் வியாழக்கிழமை (ஜன.1) முதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
எழும்பூா் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் (எண்கள்: 20665/20666) இரு மாா்க்கத்திலும் வியாழக்கிழமை (ஜன.1) முதல் விருத்தாசலத்தில் 2 நிமிஷங்கள் நின்று செல்லும்.
கூடுதல் நிறுத்தம்: சம்பல்பூா் - ஈரோடு இடையே வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 08311/08312) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் வருகிற ஜன.7 முதல் ஜன.30-ஆம் தேதி வரை ஒரு குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

