

திருப்பரங்குன்றம் விவகாரம்: திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி விமர்சித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்த தர்மேந்திர பிரதான், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்துப் பேசியிருந்தார்.
செய்தியாளர்களுடன் பேசிய தர்மேந்திர பிரதான்,
“திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தமிழ் மக்களும் ஹிந்துக்களும் தீபம் ஏற்றலாம் என்று நீதிபதி அளித்துள்ள தீர்ப்பை நிறைவேற்றாதது முட்டாள்தனம். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியில் தமிழக அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபமேற்றுவதைத் தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார்.” எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள கனிமொழி, “தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ரூ. 2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் மத்திய பாஜக அரசு ஆர்வம் காட்டுகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.