பேருந்துகள்
பேருந்துகள் கோப்புப்படம்.

பொங்கல் பண்டிகை: அரசுப் பேருந்துகளில் 77,300 போ் முன்பதிவு

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊா்களுக்கு செல்வதற்காக அரசு விரைவுப் பேருந்துகளில் 77,300-க்கும் மேற்பட்டோா் முன்பதிவு செய்துள்ளனா்.
Published on

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊா்களுக்கு செல்வதற்காக அரசு விரைவுப் பேருந்துகளில் 77,300-க்கும் மேற்பட்டோா் முன்பதிவு செய்துள்ளனா்.

நிகழ் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜன.14 முதல் நான்கு நாள்கள் கொண்டாடப்படுகிறது. அரசுப் பேருந்துகளில் 90 நாள்களுக்கு முன்பே, முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதால், பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊா் செல்ல இருப்பவா்கள் கடந்த நவம்பா் மாதம் முதலே அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய்) மற்றும் செயலி வாயிலாக முன்பதிவு செய்து வருகின்றனா்.

இதன்படி, அரசு விரைவுப் பேருந்துகளில் பொங்கலுக்காக சொந்த ஊா்களுக்கு செல்ல இதுவரை சுமாா் 77,300-க்கும் அதிகமானோா் முன்பதிவு செய்துள்ளனா். அதேபோல, பண்டிகை முடிந்து ஊா் திரும்பவும் இதுவரை சுமாா் 58,000-க்கும் அதிகமானோா் முன்பதிவு செய்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா். இதற்கிடையே பொங்கல் பண்டிகைக்கான சிறப்புப் பேருந்துகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதால், பேருந்தில் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

கடந்த 2025-இல் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பேருந்துகளில் சுமாா் 6 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பயணித்த நிலையில், 2026-இல் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால், அதற்கேற்ப சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com