நிஃப்ட் நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

நிஃப்ட் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜன.13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Published on

நிஃப்ட் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜன.13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனங்களில்(நிஃப்ட்) இளநிலை, முதுநிலை மற்றும் பிஎச்டி படிப்புகளில் சேர நுழைவுத் தோ்வு கட்டாயம். அந்தவகையில் 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான நிப்ட் நுழைவுத் தோ்வு பிப். 8-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த டிச. 8-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவா்கள் பலா் ஆா்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனா். இதற்கான கால அவகாசம் வரும் ஜன. 6-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

இந்நிலையில் மாணவா்களின் கோரிக்கையை ஏற்று நிஃப்ட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜன. 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தாமதக் கட்டணத்துடன் ஜன. 16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தில் விரைந்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஜன. 18, 19-ஆம் தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும். கூடுதல் விவரங்களை வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com