ஜன.6 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஜன.1 முதல் ஜன.6 வரை 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், வியாழக்கிழமை(ஜன.1) முதல் ஜன.6 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், அதிகாலை வேளைகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை(ஜன.1) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். மேலும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என அதில் கூறப்பட்டுள்ளது.

